நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நாட்டில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள், ரயில்வே நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் அது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டால் புரளி என்று தெரிய வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மும்பையிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நிலையில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் டெல்லியில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தரையிறங்கிய விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
No comments