• Breaking News

    நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சங்கம் நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

     


    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மாவட்ட பொருளாளர் எஸ்.சந்திரவேல் தலைமையில் அ.மோகன், ஜி.செல்வி,. ஜி.லெட்சுமி மாவட்ட இணை செயலாளர்,அ. கமலா  மாவட்டத் துணைத் தலைவர்கள்.முன்னிலையிலும் எஸ்.பாஸ்கர் மாவட்ட செயலாளர் வரவேற்புரையாற்றியும்.இந்த மனித சங்கிலி போராட்டம்  நடைபெற்றது.

    இப்போராட்டத்தில் தமிழக அரசுக்கு 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    1)பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்திடவும், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு அதை வழங்கிடவும்,குறைந்தபட்சம் பத்தாயிரம் வழங்கிடவும்,

    2) தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம், சிறப்பு காலம் வரை ஊதியம் பெரும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள்,.நியாய விலை கடை பணியாளர்கள், பட்டு வளர்ச்சி பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், ஓ எச் டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், ஆதிதிராவிட நலத்துறை துப்புரவு பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கிடவும்,

    3)பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கிடவும் அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் பொட்டலமாக வழங்கிடவும், நியாய விலை கடை பணியாளர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கிடவும்,

    4) ஏற்கனவே நடப்பில் இருந்து வரும் தொழிற்சங்க சட்டங்களை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்,ஏ பி சி சுழற்சி முறை  இடமாறுதல் வழங்கிடவும் 

    5) ஒதுக்கிட்டு கொள்கை அடிப்படையில் பதவி உயர்வு, பணி நியமனங்களை நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும்,பி சி டி பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இடம் மாறுதல் செய்வதை தவிர்த்திடவும்,

    6) ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு ஊதியம் வழங்கிட வேண்டும் மருத்துவ விருப்பத்திற்கான நிபந்தனை ரத்து செய்திட வேண்டும்.அரசாணை 113, 139, 155 ஐ ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையே  ஒழித்திடவும் 

    7)  எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து நிலை அரசு பணியாளர்களுக்கும் 30 % அல்லது ரூபாய் 10 ஆயிரம் இதில் எது அதிகமாக அதை போனதாக வழங்கிடவும், தூய்மை காவலர்களுக்கு போனஸ் வழங்கிடவும்.

    8).அரசு பணியாளர்களுக்கும் தொழில் வரி ரத்து செய்யப்பட வேண்டும்.

    9) சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக கணக்கெடுத்துக் கொண்டு பண பயன்களை வழங்கிட வேண்டும்.

    10) மருத்துவ காப்பீடு திட்டத்தில் திருத்தம் செய்து அனைத்து மருத்துவமனைகளிலும் அனைத்து நோய்களுக்கும் காப்பீடு வழங்கப்பட செய்யவும்

    11) ஓய்வூதிய பணியாளர்களுக்கு ஆஃப் பென்ஷன் 15 ஆண்டுகளுக்கு பதிலாக மற்ற மாநிலங்கள் போல் 12 ஆண்டாக குறைக்கவும், 12 ஆண்டுகளுக்கு மட்டும் பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

    12) ஓய்வூதிய பணியாளர்களுக்கு 65 வயது முடிந்தால் 5%,70 வயதுக்கு 10%,

    75 வயதுக்கு 15%, 80 வயதுக்கு மேல் 20%

    போன்ற ஐந்து வருடத்திற்கு 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் எனவும் பனிரெண்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி பணியாளர்களின் பாதுகாவலர்,தலைவர் கு பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி இப்போராட்டம் ஆனது நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநில செயலாளர் ப. மகேந்திரன் சிறப்புரையாற்றி வட்ட தலைவர் பூமாலை நன்றி உரையாற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டம் இனிதே நிறைவுற்றது.

    மக்கள் நேரம் எடிட்ட. மற்றும் நாகை மாவட்ட நிருபர் ஜி சக்கரவர்த்தி

    No comments