• Breaking News

    தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள ஆதித்யா ஹார்வேர்ஸ் கடையில் சிறப்பாக நடைபெற்ற ஆயுதபூஜை விழா


    நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.அதன்படி ஆயுத பூஜை  கொண்டாடப்படுகிறது.

    தாம்பரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆயுத பூஜை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது கடைகள், அலுவலகங்களுக்கு மற்றும் வாகனங்களை சுத்தப்படுத்தி அதன்பின் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

    அதன்படி தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள ஆதித்யா ஹார்டுவேர் கடையில் ஆயுத பூஜை விழா கடையின் உரிமையாளரும் ஷத்திரிய பாசறை அமைப்பின் நிறுவன தலைவருமான ஆதித்யா சம்பத் குமார் தலைமையில் வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.

    ஆயுத பூஜை நாளில் தொழிலை வணங்க வேண்டிய தினம் என்பதால் கடைகளை சுத்தம் செய்து, கடைகளில் உள்ள பொருட்கள், பழங்கள், பொரி, பூக்கள், தேங்காய், இனிப்புகள் ஆகியவறை சாமி முன் படையிட்டு கடை ஊழியர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஆயுத பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக  குரோம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அற்புதம், உதவி ஆய்வாளர் சேவியர் கென்னடி,  உதவி ஆய்வாளர்  சோழவேந்தன், தலைமை காவலர்கள்  செல்வராஜ், அறிவழகன், கண்ணன், சிவகாமி, ஜெயபிரகாஷ், குணசேகரன், விஜயசேகர், முதன்மை காவலர் பிரவீன் தினகரன், குரோம்பேட்டை காவல் நிலைய காவலர்கள் பிரபு, மணிகண்டன், ஜெய் கிருஷ்ணன், வசந்தகுமார், பிரபு, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆதித்யா ஹார்வேர்ஸ் ஊழியர்களுக்கு ஆதித்யா நிறுவனர் ஆதித்யா சம்பத்குமார் அவர்கள் ஆயுதபூஜை பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    No comments