அந்தியூர் ஆம்புலன்ஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள ஆம்புலன்ஸ் ஸ்டாண்ட் (அவசரகால உறுதி‌ நிறுத்தம்) செயல்பட்டு வருகிறது இங்கு அந்தியூர்  போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி உடன்  காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்தி வேல் ஆகியோர் ஆம்புலனஸ் ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது,  நோயாளிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும் ,கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், நோயாளிகள் இல்லாமல் செல்லும்போது சைரன்களை பயன்படுத்தக் கூடாது வாகனங்களின் காப்பீடு அவசியம் இருக்க வேண்டும், 18 வயதுக்குட்பட்ட நபர்களை ஆம்புலன்ஸ்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் கூடாது, சாலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்,  பள்ளி பகுதிகளில் குறிப்பிடபட்ட வேகத்தில் செல்ல வேண்டும் எனவும்  பொது மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி இன்னுயிரை காக்க உதவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.



Post a Comment

0 Comments