பாலக்காட்டில் பள்ளி மாணவிகள் 4 பேர் லாரி மோதி பலி - MAKKAL NERAM

Breaking

Thursday, December 12, 2024

பாலக்காட்டில் பள்ளி மாணவிகள் 4 பேர் லாரி மோதி பலி

 


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கரிம்பா மேல்நிலை பள்ளியில் இர்பானா, ரிதா, மிதா, ஆயிஷா ஆகியோர் 8 ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று மாலை 4:30 மணியளவில் பள்ளி முடித்து வீட்டுக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சிமெண்ட் ஏற்றி அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் லாரிக்கு இடையே சிக்கிய நான்கு மாணவிகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் வந்து விபத்து ஏற்படுத்திய லாரியை அப்புறப்படுத்திய பிறகே சீரானது. இப்பகுதியில் சாலை முறையாக அமைக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதியினர், இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.விபத்தில் மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். சம்பவம் குறித்து கல்லடிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment