எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதா..... அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, December 18, 2024

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதா..... அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்

 


நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த நான்கு நாட்களாக இந்திய அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லி இருந்தால் அடுத்த 7 ஜென்மத்திற்கு  சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக் கொள்வதில் பாஜக மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும் என கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியிருப்பதாவது, யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்…

அம்பேத்கர்… அம்பேத்கர்…

அவர் பெயரை

உள்ளமும் உதடுகளும் மகிழ

உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment