புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , தூ.நாயக்கன்பாளையம் ஒன்றியம் , தூ.நாயக்கன் பாளையம் முதல் நாய்க்கன் காடு வரை நெடுஞ்சாலை துறையின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.40 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜைசெய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூ.நாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஆர் கந்தசாமி , டி.கே.சுப்பிரமணியம் , பேரூராட்சி மன்ற தலைவர் சிவராஜ் , பேரூர் கழக செயலாளர் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments