பிரபல நகைச்சுவை நடிகர் குட்டை சிவன் மாரடைப்பால் காலமானார் - MAKKAL NERAM

Breaking

Sunday, December 22, 2024

பிரபல நகைச்சுவை நடிகர் குட்டை சிவன் மாரடைப்பால் காலமானார்

 


பிரபல நகைச்சுவை நடிகர் சிவன். இவர் குட்டை சிவன் என்று அழைக்கப்படுவார். இவர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு 49 வயது ஆகும் நிலையில் மாரடைப்பால் திடீரென காலமானார். இவர் கேரள மாநிலம் மூணாறை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர்.

இவர் நடிகர் விஜயின் ஆரம்பகால திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு மைனா என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இவருடைய உருவத்தின் காரணமாக குட்டை சிவன் என்று அழைக்கப்படுவார். மேலும் இவருக்கு 49 வயது ஆகும் நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment