மறுக்கா மறுக்கா சொல்லு..... ஐபிஎஸ் அதிகாரியை கிண்டல் செய்த சீமான்
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் அவர் பேசியதாவது: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது நம்பிக்கையில்லாததன் காரணமாகத் தான் இன்று போராட்டம் நடத்தி வருகிறோம். நீட், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக போட்ட தீர்மானங்கள் யாரிடம் கொடுத்தீர்கள்? இதனை எங்களைத் தவிர வேறு யார் கேட்கிறார்கள்?
டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வந்ததில், தி.மு.க., அ.தி.மு.க.,வினர் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். மீத்தேன், ஈத்தேன் திட்டத்திற்கு, தெரியாமல் கையெழுத்திட்டு விட்டோம் என்று அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அப்படியென்றால், அண்ணா அறிவாலயத்தை தெரியாமல் எழுதி வைத்து விடுவீர்களா?
நீட், ஜி.எஸ்.டி. என்.ஐ.ஏ., உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி தான். எங்கள் நிலத்தை, வளத்தை அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே இந்தப் போராட்டம். இவ்வாறு சீமான் பேசினார்.
கூட்டத்தில் பேசிய சீமான், ''எங்களை பேரினவாதி என்று சொல்லும் போது, நல்ல தமிழ் தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்திருக்கோம் என்பதை காட்டுகிறது'' என்று கூறி, 'நடிகர் கவுண்டமணியைப் போல மறுக்கா மறுக்கா சொல்லு,' என்று கிண்டலாக கூறினார்.
திருச்சி எஸ்.பி.,யான வருண் குமார், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது, 'நாம் தமிழர் கட்சி பேரினவாத அமைப்பு' என்று கூறியிருந்தார். அதை கிண்டல் செய்யும் வகையில், இன்று சீமான் பேசியுள்ளார்.
No comments