குன்றத்தூரில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி மதனந்தபுரம் கே..பழனி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் குன்றத்தூர் பெரிய தெருவில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ப.மோகன், கழக அமைப்புச் செயலாளர் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்புச் செயலாளர், மைதிலி திருநாவுக்கரசு, தலைமைக் கழக பேச்சாளர் நெல்லையப்பன் பாலாஜி, காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் மாவட்ட, ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள், அம்மா பேரவை நிர்வாகிகள், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள், மாவட்டம் மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு, மாவட்ட சிறுபான்மை பிரிவு, வட்டச் செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
இறுதியில் வரதராஜபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோதண்டராமன் அவர்கள் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் விசோமசுந்தரம் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மதனந்தபுரம் கே.பழனி முன்னிலையில் இணைந்து கொண்டனர்.
No comments