துணை முதல்வர் பிறந்த தினத்தையொட்டி செட்டியூரில் 2 இடங்களில் திமுக கொடியை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஏற்றி வைத்தார்
துணை முதல்வர் உதயநிதி பிறந்த தினத்தையொட்டி செட்டியூரில் 2 இடங்களில் திமுக கொடியினை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஏற்றி வைத்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் செட்டியூர் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி கல்லுரணி ஊராட்சி செட்டியூரில் 2 இடங்களில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறு ப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திமுக கொடியினை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக்முகமது, துணை அமைப்பாளர்கள் ஷபீக் அலி, ராமராஜ், வேல்சாமி, நகராட்சி தலைவர்மூப்பன்ஹபிபூத் ரஹ்மான், உதயசூரியன் நற்பணி மன்ற நிர்வாகிகள் முருகேசன், மூக்கன், பரமசிவன், ரவிச்சந்திரன், சேர்மசெல்வன், சங்கர்,குணம்,பூசமணி, சின்னமாரி, தேன்ராஜ், பரமசிவன், செல்வன், வினோத்ஆனந்த், இசக்கிமுத்து, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments