திருவள்ளூர்: 43 ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்ட 85 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டி..... கருணை காட்டிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் - MAKKAL NERAM

Breaking

Monday, January 27, 2025

திருவள்ளூர்: 43 ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்ட 85 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டி..... கருணை காட்டிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்


திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டம் சிபி காலனி பகுதியைச் சேர்ந்த ருக்மணி என்ற 85 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டி, கணவரால் கைவிடப்பட்ட நிலையில் குழந்தைகள் இல்லாமல் தன்னம் தனியாக சுமார் 43 ஆண்டுகளாக எஸ்விஜி கிராம கணக்கு தாக்கல் எண் 13/19இல் 540 சதுர அடி கொண்ட அரசு நத்தம் பகுதியில் குடியிருந்து வருவதாகவும் இதற்கு பலமுறை அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் இதுவரை பட்டா வழங்கப்படாததால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கரை சந்தித்து மனு அளித்தார்.

மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் அலுவலகம் செல்ல சர்க்கரை நாற்காலி இல்லாததால் அவரது உறவினர் கையிலே தூக்கிக் கொண்டு வந்த அவலமும் இங்கு அரங்கேறியது.

இதனை எடுத்து செய்தியாளர்கள் மாற்றுத்திறனாளி மூதாட்டியை இளைஞர் தூக்கி வருவதை வீடியோ எடுத்ததை பார்த்த மாவட்ட ஆட்சியர் மூதாட்டிக்கு தேவையான பட்டா சம்பந்தப்பட்ட விவகாரத்தை உடனடியாக விசாரணை மேற்கொண்டு முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment