• Breaking News

    மேடவாக்கம் நேதாஜி வித்யாலயம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி விழா

     


    நேதாஜி பிறந்த நாளையொட்டி மேடவாக்கம் நேதாஜி வித்யாலயம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியினை பள்ளி தாளாளர் மேடவாக்கம் எம்.பி.கண்ணபிரான் ஏற்பாடு செய்திருந்தார்.இதையடுத்து விழிப்புணர்வு பேரணியினை பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியன் மற்றும் ப.சேகர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.


    இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பள்ளி வளாகத்தில் இருந்து மாம்பாக்கம் சாலை வழியாக பள்ளிக்கரணை காவல் நிலையம் வரை பேரணியாக சென்று வாகன ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் நெடுமாறன்,பள்ளி மாணவ மாணவியர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு எடுத்துரைத்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    No comments