திரிஷா கொஞ்ச நாட்களில் அமைச்சர் ஆகிவிடுவார் - மன்சூர் அலிகான் - MAKKAL NERAM

Breaking

Sunday, January 12, 2025

திரிஷா கொஞ்ச நாட்களில் அமைச்சர் ஆகிவிடுவார் - மன்சூர் அலிகான்

 



தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்து கூறுகையில், 'அவர் இப்போதுதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் மனு கொடுக்கிறார். அதற்கு நம்மால் என்ன பண்ண முடியும். போனால் ஏன் போனார் என்கிறீர்கள், போகவில்லை என்றால் ஏன் போகவில்லை என்கிறீர்கள்'என்றார்.

தொடர்ந்து பேசுகையில், இன்னும் கொஞ்ச நாட்களில் திரிஷா அமைச்சர் ஆகிவிடுவார் என்றும் தனுஷ், நயன்தாரா விவகாரம் குறித்தும் பேசினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment