100 நாள் வேலை திட்டத்தில் 1.55 கோடி பேர் நீக்கம்..... மத்திய அமைச்சர் கமலேஷ் பஸ்வான் தகவல் - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 5, 2025

100 நாள் வேலை திட்டத்தில் 1.55 கோடி பேர் நீக்கம்..... மத்திய அமைச்சர் கமலேஷ் பஸ்வான் தகவல்

 


மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நாடு முழுதும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பஸ்வான் கூறியதாவது: போலியான தகவல், கிராம பஞ்சாயத்தில் இருந்து இடம் பெயர்தல் போன்ற காரணங்களால், 2022 - 23 நிதியாண்டில் 86.17 லட்சம் தொழிலாளர்களும், 2023 -- 24 நிதியாண்டில் 68.86 லட்சம் தொழிலாளர்களும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு அட்டையை புதுப்பிப்பது மற்றும் நீக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் மாநில அரசுகளிடம் சட்ட விதிகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான தொழிலாளர் யாரும் விடுபடக் கூடாது என்ற நோக்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிலையான செயல்திட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்க அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment