தவெக பம்மல் தெற்கு பகுதி சார்பில் கொடியேற்றி வைத்து அறுசுவை உணவு சிக்கன் பிரியாணி 200 பேருக்கு வழங்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசியல் புதிய எழுச்சியாக அதனை கொண்டாடும் வகையில்கழக தலைவர் விஜய்யின் ஆணைக்கிணங்க கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து அக்கட்சியின் பம்மல் தெற்கு பகுதி தலைவர் பம்மல் ஏ.கண்ணன் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் வி.குமார் அவர்களின் வழிகாட்டுதல்படி பம்மல் தெற்கு பகுதி தலைமை சார்பிலும் மற்றும் 10வது வட்ட தலைமை சார்பிலும் பம்மல் மெயின் ரோடு நடராஜன் தெருவில் கட்சியின் கொடி ஏற்றி 200 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பம்மல் தெற்கு பகுதி தலைவர் பம்மல் ஏ.கண்ணன் துணை செயலாளர் ஜி.பராசக்தி, துணை தலைவர் ஆர்.ஷபீர், 10வது வட்ட தலைவர் நவீன்ராஜ், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ஆகாஷ், துணைத் தலைவர் சபீர்அகமது, துணை செயலாளர் ஸ்ரீசாய் சூர்யா, இணை செயலாளர் விக்கி, துணை பொருளாளர் சிம்சன் மற்றும் தினேஷ்குமார், முகமது பாருக், முகமது ரஃபி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார் உடன் பம்மல் தெற்கு பகுதி இணை செயலாளர் ரஞ்சித்12வது வட்ட தலைவர் ஜில்லா ரகு, பம்மல் தெற்கு பகுதி மகளிர் அணி புவனேஸ்வரி ரகு, இர்பான், மேலும் 10வது நிர்வாகிகள், 12வது வட்ட நிர்வாகிகள் மற்றும் பம்மல் தெற்கு பகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
No comments