• Breaking News

    திருவள்ளூர்: பழவேற்காடு தினத்தை முன்னிட்டு சுமார் 500 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கட்டுமரப் போட்டிகள் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் ஆண்டுதோறும் பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பழவேற்காடு லைட் ஹவுஸ் மேம்பாலத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 

    பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டி குறிப்பாக மேம்பாலத்தின் மீது நடைபெற்ற கோலப்போட்டியும், பழவேற்காடு மீனவர்கள் கலந்து கொண்ட தனி நபர் கட்டுமரப் போட்டியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதில் ஐவர் கோலம் போட்டியில் பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தும், தனிநபர் கட்டுமரப் போட்டியில் ஜமீலாபாத் கிராமத்தைச் சேர்ந்த மீராசா என்பவர் முதல் பரிசையும் தட்டிச் சென்றனர்.

    பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர் இவர்களுக்கு பழவேற்காடு மீன்வளத்துறை ஆய்வாளர் பாரதிராஜா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஆர்டி பவுண்டேஷன் இயக்குனர் பெனிடிக் சேவியர்,ஒருங்கிணைப்பாளர் திருமலை நகர் சுமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    No comments