• Breaking News

    கூடலூர்: பாரஸ்ட் பங்களா பின்புறம் யாதவகுல சீலையகும்பு கோனார் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்

     


    தேனி மாவட்டம் கூடலூர் பாரஸ்ட்பங்களா பின்புறம் யாதவகுலசீலையகும்புகோனார் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கருப்பசாமி கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று மாலை   வாஸ்து சாந்தி பூஜை தொடங்கியது. பின்னர் கருப்பசாமி சிலை, விநாயகர் , பிச்சையம்மாள், நாகம்மாள் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

    இதனை தொடர்ந்து இன்று காலை   கணபதி ஹோமம் பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கும்பத்தை மேள தாளத்துடன்  கருப்பசாமி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன.

     பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கருப்பசாமி சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தை சுருளிமலைஅய்யப்பன் கோவில் அர்ச்சகர்கணேஷ் நடந்தினார். இதில் கம்பம், கூடலூர், அனுமந்தன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஏற்பாட்டினை யாதவகுல சீலையகும்பு கோனார் பங்காளிகள் செய்திருந்தனர்.

    No comments