அரசு மருத்துவமனையில் சண்டை போட்ட நடிகர் கஞ்சா கருப்பு
சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி ஒருவர், இதனால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் சிகிச்சைக்கு வந்திருந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 2 மருத்துவர்கள் பணியில் இருந்ததாக மாநகராட்சி சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும் ஒரு மருத்துவர் மட்டுமே சிறிது காலதாமதமாக வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments