மனைவியின் கள்ளத்தொடர்பு..... கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் முருகவேல்- சுமித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். முன்னதாக திருப்பூரில் இருந்த போது சுமித்ராவுக்கும் கரூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. முனியாண்டிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் வீட்டிலிருந்த சுமித்ரா திடீரென தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகவேல் தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுமித்ராவை தேடி கண்டுபிடித்து அவருக்கு அறிவுரை கூறி கணவருடன் சேர்ந்து வாழுமாறு அனுப்பி வைத்தனர். அவ்வபோது சுமத்ரா முனியாண்டியுடன் சென்று விடுவார். அவரை கண்டுபிடித்து வந்து முருகவேல் குடும்பம் நடத்தி வந்தார்.
சம்பவம் நடைபெற்ற அன்று முருகவேல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது முனியாண்டி தனது வீட்டில் இருந்து வெளியே வருவதை பார்த்து முருகவேல் கோபமடைந்தார். உடனே முருகவேல் முனியாண்டியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் முருகவேலை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments