• Breaking News

    தூக்கில் தொங்கிய நிலையில் பள்ளி மாணவிகள் சடலமாக மீட்பு

     


    ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டம் கலிபேலா பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் ஜோதி (வயது 13), மந்திரா (வயது 13) ஆகிய இரு சிறுமிகள் 7ம் வகுப்பு பயின்று வந்தனர்.

    இதனிடையே, கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து 2 மாணவிகளும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாயமான மாணவிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் 2 மாணவிகளும் தூக்கில் தொங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments