கொல்கத்தா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தூக்குப்போட்டு தற்கொலை - MAKKAL NERAM

Breaking

Wednesday, February 5, 2025

கொல்கத்தா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

 


மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் அமைந்துள்ள கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று காலை 10.40 மணியளவில் சர்வதேச சரக்கு பிரிவில் படை வீரர்கள் தங்கும் கட்டிடம் ஒன்றில், மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) சேர்ந்த வீரர் ஒருவர் தூக்கு போட்டு கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர். உயிரிழந்த சி.ஐ.எஸ்.எப். கான்ஸ்டபிளாக இருந்து வந்துள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விவரம் மற்றும் அடையாளம் எதுவும் தெரிய வரவில்லை. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment