• Breaking News

    காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய வேங்கடமங்கலம் நல்லம்பாக்கம் ஊராட்சி அதிமுக சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது


    செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல்கான பாக கழக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வேங்கடமங்கலம் நல்லம்பாக்கம் ஊராட்சி சார்பில் சமுதாய நலக்கூடத்தில் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.கஜா என்கின்ற கஜேந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கலந்துகொண்டு பாக முகவர்களுக்கான ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஏ.பொன்னுசாமி, விவசாய அணி மாவட்ட செயலாளர் இரா.ரவி, விவசாய அணி மாவட்ட தலைவர் பி.கண்ணப்பன், நல்லம்பாக்கம் தலைவர் லட்சுமணன், கீழப்பாக்கம் முன்னாள் தலைவர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட வேங்கடமங்கலம் நல்லம்பாக்கம் கிளைக் கழக நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    No comments