• Breaking News

    மகா கும்பமேளா..... மகனுடன் புனித நீராடிய நடிகை கஸ்தூரி


     தமிழ் சினிமாவில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் நடிகை கஸ்தூரி அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியன் படத்தில் கமலஹாசனுக்கு மகளாகவும் தங்கையாகவும் இவர் நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இவர் உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு அங்குள்ள திருவேணி சங்கமத்தில் புனித நீராடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வில் இவருடன், தனது மகனான சங்கல்ப் ரவிக்குமாருடன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    No comments