வத்தலகுண்டு அருகே கிடா முட்டு போட்டி..... கிடாய்கள் ஆவேசமாக மோதின - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 13, 2025

வத்தலகுண்டு அருகே கிடா முட்டு போட்டி..... கிடாய்கள் ஆவேசமாக மோதின


திண்டுக்கல், வத்தலகுண்டு சவுத் லயன்ஸ் கிடா முட்டு சங்கம் சார்பில் தென் மாவட்ட அளவிலான கிடா முட்டு போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்றன.களத்தில் விடப்பட்ட கிடாய்கள் ஆவேசமாக மோதின இதில் அதிக முட்டுகள் முட்டி கீழே விழாமல் களத்தில் நின்ற கிடாய்களுக்கு கட்டில், பீரோ உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன.

இதேபோல் 60 முட்டுகளுக்கு மேல் முட்டி ஜெயிக்க முயன்று களத்தில் நின்ற 2 கிடாய்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.முன்னதாக முழு பரிசோதனைக்கு பின்பு போட்டிகளுக்கு கிடாய்கள் அனுமதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here