அதிக வரி செலுத்தும் பிரபலங்களில் அமிதாப் பச்சன் முதலிடம்..... எத்தனை கோடி தெரியுமா..? - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 18, 2025

அதிக வரி செலுத்தும் பிரபலங்களில் அமிதாப் பச்சன் முதலிடம்..... எத்தனை கோடி தெரியுமா..?


 கடந்த 1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமிதாப் பச்சன், 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 82 வயதாகிறது. இந்திய திரைத் துறையின் மூத்த நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் 2024-25ம் நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.

ரூ.120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக, அமிதாப் பச்சன் தொடர்ந்து திகழ்கிறார். இதன் மூலம் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ரூ.92 கோடி வரி செலுத்தி ஷாருக்கான் முதலிடத்தில் இருந்தார். கடந்தாண்டு நான்காம் இடத்தில் இருந்த அமிதாப் பச்சன், தற்போது ரூ.120 கோடி வரி செலுத்தியதன் மூலம் ஷாருக்கானை விஞ்சி, முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

சல்மான் கான் ரூ.75 கோடி வரி செலுத்தி உள்ளார். வயதானாலும், அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைத்துறையில் அமிதாப் பச்சன் ஆதிக்கம் செலுத்துகிறார் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment