எனக்கு சால்வை போட மாட்டியா.... தொண்டர் கன்னத்தில் பளார் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்
விருதுநகரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வைத்து தொண்டர் ஒருவரை ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக கட்சியின் தொண்டர் நந்தகுமார் என்பவர் மேடைக்கு வந்து ராஜேந்திர பாலாஜிக்கு சால்வை அணிவிக்காமல் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தார்.
மேலும் இதனால் அவர் ஆத்திரமடைந்து மேடையில் வைத்தே நந்தகுமாரை கன்னத்தில் பளார் விட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்ட நிலையில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் சமீப காலமாக அதிமுக பொது மேடைகளில் நிர்வாகிகள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments