சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மற்றும் எக்ஸ்னோரா நிறுவனம் இணைந்து அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு ஒப்படைக்கும் விழா நடைபெற்றது
தாம்பரம் மாநகராட்சியில் மண்டலம் - 5, வார்டு -69-ல், மாடம்பாக்கம் சீரடி சாய் நகர் பகுதியில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மற்றும் எக்ஸ்னோரா நிறுவனம் இணைந்து புதுப்பிக்கப்பட்ட திறந்தவெளி கிணற்றை பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் சேகரிக்கும் ஆதாரப்புள்ளியாக, முதன் முதலாக சிறப்பு நுட்பங்களுடன், வடிவமைக்கப்பட்ட அப்பகுதிவாழ் மக்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா கலந்துகொண்டு திறந்தவெளி கிணறு மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார் பின்னர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா பேசுகையில் சீரடி சாய் நகர் பகுதியில் நீர் சேமிப்பு,நிலத்தடி நீர் ஆதாரம் பெருக, அடுத்த தலைமுறையினர் மீது தொலைநோக்குடன் பெரும் அக்கறை கொண்டு சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மற்றும் எக்ஸ்னோரா நிறுவனத்துடன் இணைந்து சீரடி சாய் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தால் புதுப்பிக்கப்பட்ட கிணறு_ இந்த கிணற்றை மீட்டெடுக்க சீரடி சாய் நகர் நலவாழ்வு சங்கத்தினர் மேற்கொண்ட முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
கார்ப்பரேட் நிறுவனத்துடன் உள்ளாட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து சுற்றுச்சூழல் சிக்கல்களை, வருங்கால நீர்த்தேவைகளுக்கு பாதுகாப்பு அரணாய் விளங்க மேற்கொண்ட இந்த பணியானது, மற்ற அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாக, அமையும் எனவும், தாம்பரத்திலேயே சீரடி சாய் நகரானது, இது போன்ற செயல்பாடுகளால் முன்னோடி நகராக அமையும் என்று சிறப்பித்தும், நீர் மேலாண்மையின் மூலம் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் கூறி தன் சிறப்பு உரையை வழங்கினார்.
உடன் 5வது மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், சோழா நிறுவன குழுமத்தின் CSR மூத்த தலைவர் , ரிச்சா சிங், 69வது மாமன்ற உறுப்பினர் வாட்டர் ராஜ், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் தலைவர் செந்தூர் பாரி, எக்ஸ்னோரா பொருளாளர் சுப்பிரமணி,அறங்காவலர் மோகனசுந்தரம்,தாம்பரம் பகுதி நிர்வாகி சீதாராமன், , சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள் எக்ஸ்னோரா நிர்வாகிகள், மவுண்ட் கார்மல் சர்ச் அருட்தந்தை ரேமண்ட்,தாம்பரம் வாழ் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, சீரடி சாய் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், அருகமை நலச்சங்க பிரதிநிதிகள், சீரடி சாய் நகர்வாசிகள், குழந்தைகள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சீரடி சாய் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தின் சார்பில் மீட்பன் அவர்கள் வரவேற்புரையும், பூபாலன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினர். எக்ஸ்னோரா சார்பில் சுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
No comments