• Breaking News

    மயிலாடுதுறை அருகே இரட்டை கொலை வழக்கில் கைதான சாராய வியாபாரிகள் மூவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவு


    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தது மற்றும் சாராய விற்பனையை தட்டி கேட்டது தொடர்பான பிரச்சனையில் கடந்த மாதம் 14ம் தேதி இரவு சாராய வியாபாரிகளான ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து தினேஷ் என்பவரை தாக்க முற்பட்டபோது தடுத்த முட்டம் ஹரிஷ், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஹரி சக்தி ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். 

    இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா, சஞ்சய் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி முதல் கடை நிலை காவலர் வரை கூண்டோடு மாற்றப்பட்டனர். இந்நிலையில் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய ராஜ்குமார்.34. அவரது மைத்துனர்கள் தங்கதுரை.28, மூவேந்தன்.24. ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.

     அதன்படி மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார் உத்தரவு கடிதத்தை செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஏற்கனவே மூவரும் அடைக்கப்பட்டுள்ள கடலூர் மத்திய சிறையில் ஒப்படைத்தார்.

    No comments