• Breaking News

    நாகப்பட்டினம் வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி நடைபெற்றது


    நாகப்பட்டினம் மாவட்டம் நாகை  வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி நான்கு நாள் 13.03.2025 முதல் 16.03.25 வரை பாப்பா கோயில் ஊராட்சியில் கிராம சேவை மையம் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

    இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தலைமையில் மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார் இதில் செயல்முறை விளக்கம், சுயஉதவிக் குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், தனி நபர் தேவை, குடும்ப தேவை (ம) கிராமத்தின் தேவை கொண்டு காரணிகள், 6 பரிமாணங்கள் கொண்டுள்ளது.  

    கல்வி , சுகாதாரம், வாழ்வாதாரம், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு, சமூக மேம்பாடு , போன்ற பரிமாணங்கள் கொண்டு 2025 - 2026 முன்னுரிமைப்படுத்தப்பட்ட காரணிகள் இலக்கு கொண்டு இந்த ஆண்டு  உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் கொண்டு செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி

    No comments