• Breaking News

    தென்காசியில் நகர திமுக சார்பில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை நகரசெயலாளர் சாதிர் திறந்து வைத்தார்


    தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கோடைகால வெப்பத்திலிருந்து பொது மக்களை காத்திட கழகத்தின் சார்பில் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் படி தென்காசி நகர திமுக சார்பில் சுவாமிசன்னதிபஜார் சொர்ண தேவர் டீக்கடைக்கு அருகில் தண்ணீர் மற்றும் நீர்மோர்பந்தலை நகர கழகச் செயலாளரும் நகர மன்ற தலைவருமான சாதிர் திறந்து வைத்தார்.

     இந்நிகழ்வில் நகரக் கழக நிர்வாகிகள் அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் என்ற கிட்டு துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ்,பொருளாளர் ஷேக்பரீத்,மாவட்ட பிரதிநிதி மைதீன்பிச்சை, மாவட்ட பொறியாளர்அணி தலைவர் தங்கபாண்டியன், வட்டக் கழக நிர்வாகிகள்:- சண்முகநாதன், அமீர் ,பேக்சோமசுந்தரம், பரமசிவன், அஷ்ரப் அலி, ரெசவு மைதீன், அறங்காவலர்கள் இசக்கி ரவி ,முருகானந்தம், சிவனு சன்ராஜா, மாணவரணி மைதீன், ராஜன்,இளைஞரணி முரளி, இப்ராஹிம், ராமநாதன், சபரி மெஸ் சங்கர்,சம்சுதீன், தேவதாஸ்,மாரியப்பன்,  கவிதா மாரியப்பன், அப்துல் பாசித், பொத்தைமுருகன், கஸ்வா பாய் ,மாரிக்குட்டி,EB இசக்கி செய்யதுஆபில்,அப்துல் ரசாக், சாரதி, முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் கோடை வெப்பத்தைதணிக்கும் பொருட்டு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன.

    No comments