• Breaking News

    தேனி: 60 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து..... 2 பேர் படுகாயம்....

     


    தேனி மாவட்டம் போடி மெட்டு மலைப்பகுதியியில் நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். போடி மெட்டு சோதனைச்சாவடி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த 4 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விபத்தின்போது காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் 2 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதேவேளை, பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றிய கார் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments