• Breaking News

    கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஆரம்பாக்கத்தில் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர்  மு.மணிபாலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்விற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மஸ்தான், பரத்குமார், இயேசு ரத்தினம், உதயகாந்த் அம்மாள், திருஞானம் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாவட்ட நிர்வாகிகள் எம்.எல்.ரவி, உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ. குணசேகரன், வெங்கடாஜலபதி பங்கேற்று பேசினர்.இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் வருகின்ற 18ஆம் தேதி பொன்னேரிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் தமிழக முதல்வருக்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையிலும், மேற்கண்ட நிகழ்வில் திரளானோர் பங்கேற்கவும் தீரமானம் இயற்றப்பட்டது. அவரை ஆளுநருக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டு திமுக அரசுக்கு ஆதரவான தீர்ப்பை பெற்றமைக்கு தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.


    இந்தக் கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் கா.சு ஜெகதீசன் முரளிதரன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மணி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.

    No comments