அந்த தியாகி யார்..? பேட்ஜுடன் சட்டசபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏ.க்கள்
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து மார்ச் 24-ந் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இவ்வாறு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments