அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை பறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - MAKKAL NERAM

Breaking

Friday, April 11, 2025

அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை பறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


 விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிக கீழ்த்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார்.

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பொன்முடியிடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து திருச்சி சிவாவை விடுவித்து புதிய பொறுப்பு வழங்கியுள்ளார் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

No comments:

Post a Comment