பிரேக்குக்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட விபரீதம்.... பள்ளத்தில் கார் கவிழ்ந்து தாய், மகள் படுகாயம்.....
கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் கார் ஒன்றில் செஞ்சேரி மலை கோயிலுக்கு சென்றிருக்கிறார். அப்போது பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மதித்துள்ளார்.
இதனால் கார், அருகில் இருந்த 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக்கண்ட அப்பகுதியினர் விரைந்து வந்து, காரில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாய், மகள் இருவரையும் மீட்டனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
No comments