கும்மிடிபூண்டி அருகே பெருவாயல் அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 30 ம் தேதி கோ பூஜை கணபதி ஹோமம் தொடங்கி நவகிரக ஹோமம் கோ பூஜை முதல் காலயாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்து மகா தீபாரதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இறுதி நாளான இன்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பட்டாசியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர் அப்போது கூடி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் அபிராமன் ஜெயராமன் ஊர் நிர்வாகிகள்கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை புதுவாயில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments