தாம்பரத்தில் மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் அயோத்திதாச பண்டிதர் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் - MAKKAL NERAM

Breaking

Friday, May 30, 2025

தாம்பரத்தில் மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் அயோத்திதாச பண்டிதர் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தேசிய சித்தா மருத்துவமனையில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் பி.அருண் அவர்கள் ஏற்பாட்டில் அயோத்திதாச பண்டிதர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தேசியத் தலைவர் ஏ.எஸ்.செல்வராஜ், தேசிய பொதுச் செயலாளர் என்.பழனிவேல், தேசிய செயலாளர் அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பு உரையாற்றினார்கள் மாநிலத் துணைத் தலைவர் மகிமை தாஸ் முகமது அலி தேசியா, ஜோயல், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர் அதனைத் தொடர்ந்து  இறுதியில் மாநில வழக்கறிஞர் அணி தலைவராக அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment