மயிலாடுதுறை: முருகமங்கலம் ஸ்ரீ பால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..... திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த முருகமங்கலம் கிராமத்தில்.உள்ள கிராம தெய்வமாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ பால மாரியம்மன் ஆலயம் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருந்து வருகிறது இந்த ஆண்டு சித்திரை மதம் தீமிதி திருவிழா நடைபெற்றது.இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 27-ந்தேதி கணபதி ஹோமம் செய்து பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனையொட்டி காப்பு கட்டிய பக்தர்கள் கரகம் காவடி எடுத்து வீதியுலா வந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க குத்தாலம் காவல் நிலைய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
No comments