நாகை: வேளாண் மாணவர்களால் தென்னையில் கரையான் தாக்குதலைக் குறைக்க சுண்ணாம்பு பூசும் செயல்விளக்கம்
நாகை மாவட்டம்,தலைஞாயிறு அருகே தாமரைப்புலத்தில் கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் (பாலாஜி ஷங்கர்,சந்துரு, ஹரிகிஷோர்,ஜெயமுருகன்,சையத் பஷீர்,தரிஷ் மற்றும் யோக சீனிவாசன்)ஒருங்கிணைத்த சிறப்பு செயல்விளக்கம் நடத்தினர். இதில், தென்னையில் கரையான் தாக்குதலை தடுக்கும் முறையாக சுண்ணாம்பு பூசும் நுட்பம் விவரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாணவர்கள் கரையான் பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் தென்னைக்கு அது ஏற்படுத்தும் சேதங்களை தெளிவாக விளக்கினர். கரையான் தாக்குதலால் தென்னையின் வேர்கள் பாதிக்கப்பட்டு மரங்கள் வாடும் அபாயம் ஏற்படுகிறது என்பதை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
அதையடுத்து,நேரடி செயல்விளக்கம் நடைபெற்று, தென்னையின் தண்டு பகுதியில் எவ்வாறு சரியான முறையில் சுண்ணாம்பை பூசவேண்டும் என்பதைக் காண்பித்தனர். சுண்ணாம்பின் பசைபோன்ற தன்மை கரையானின் நுழைவைத் தடுக்க உதவுகிறது என்றும், மரத்தின் ஆயுளை அதிகரிக்கிறது என்றும் மாணவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வேளாண் மாணவர்களின் முயற்சியை பாராட்டினர் மற்றும் இந்த முறையை தங்களது பண்ணையில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்தனர்.
No comments