செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி ஈ.சி.ஆர். பகுதியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்சியில் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன் எம்.எல்.ஏ , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் S.S. பாலாஜி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முட்டுக்காடு ஊராட்சிமன்றத் தலைவர் சங்கீதா மயில்வாகனன் மற்றும் காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி அண்ணன் மயில்வாகனன் அவர்கள் வரவேற்பு வழங்கினர்.உடன் தலைமை கழக, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.



0 Comments