• Breaking News

    தமிழ்நாடு முழுவதும் இன்று பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

     


    தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. 

    இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், பாகிஸ்தான் வங்கசேத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளை கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜனதா சார்பில் இன்று (திங்கட்கிழமை) கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    காஷ்மீர் - பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக சார்பில் கோவையில் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments