பல்லாவரம் 13வட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஊக்க தொகையும், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, June 4, 2025

பல்லாவரம் 13வட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஊக்க தொகையும், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

 


செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி 13வது வட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13வது வார்டு வட்ட கழக செயலாளர்  பி.பரமசிவம் அவர்களின் ஏற்பாட்டில்  பல்லாவரம் ஜீஎஸ்டி ரோடு காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள வார்டு பகுதியில் இருக்கும்  அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மாணவிக்கு 7000 ரூபாய், இரண்டாம் இடைத்தை பெற்ற 5000 ரூபாய், மூன்றாம் இடத்தைப் பிடித்த 3000 ரூபாய், விபத்தில் ஏற்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து தந்தை இழந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 51 போர்க்கு கல்வி ஊக்க தொகை தல 1000 ரூபாய் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு 480 நபர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேக், கல்வி உபகரணங்களை சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இகருணாநிதி,2வது மண்டல குழு தலைவர் பல்லாவரம் வடக்கு பகுதி கழக செயலாளருமான இ.ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரேணுகாதேவி  பரமசிவம், மாவட்ட பிரதிநிதி ரமேஷ்,  பகுதி துணைச் செயலாளர் சிவகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் மற்றும் 13வது வட்ட கழக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment