ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மண்ணிவாக்கத்தில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வாங்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மண்ணிவாக்கம் கூட்ரோடு சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வழிகாட்டுதலின் படி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பள்ளி குழந்தைகளுக்கு நோட் புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட துணைத் தலைவர் இரா.ஆனந்தராஜ் தலைமையிலும் காட்டாங்குளத்தூர் வடக்கு வட்டார துணைத் தலைவர் எம்.ஆர்.இளையராஜா முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, காட்டாங்குளத்தூர் வடக்கு வட்டாரத் தலைவர் ஊனை. ஜானகிராமன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ஜே.கே.வி. பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு அரசு பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பென்சில் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சிக்கன் பிரியாணி அன்னதானம் வாங்கப்பட்டது.
இதில் நிர்வாகிகள் மண்ணிவாக்கம் கிராம கமிட்டி தலைவர் எம்.ஆர்.மோகன், மாவட்ட ஆட்சியர் பட்டதாரி தலைவர் எம்.ஆர்.என்.தவச்செழியன். ஜி.பரமசிவம், என்.கதிரவன், வி.ராமச்சந்திரன், இ.நீலமேகம், பி.தேவராஜ், எம்.ஆர்.மோகன், பி.பவுல்ராஜ், ரமேஷ், பார்த்திபன், த.ஏழுமலை, என்.கந்தன், த.சுகந்தி, எம்.எம்.பார்த்திபன், எம்.சதீஷ், ஏ.பிரபு, ஜி.தாமஸ், எம்.ஆர்.என்.ஞானசேகரன், நா.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் மாவட்டம் ஒன்றிய பகுதி வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
No comments