கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாம்பரம் அடுத்த கௌரிவாக்கத்தில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சர்வதேச போதை பொருள் பயன்பாடு மற்றும் போதை பொருள் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிறுவன தலைவர் நாஞ்சில் சி.மனோகரன் தலைமையில் மக்கள் பசுமை இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ரேகா ரெங்கையன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்வர் டாக்டர் ஆர்.சரவணன், எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் ரோட்டராக்ட் கிளப்பின் உதவிப் பேராசிரியர், இயற்பியல் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி. சுஜாதா தலைவர், இயற்பியல் துறை, இணை என்.சி.சி அதிகாரி கேப்டன் ஐ.பிருதிவிராஜ், எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் கணிதத் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.காயத்ரி பிரியா, எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் நிர்வாக அலுவலகம் மற்றும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்ரோட்டராக்ட் கிளப்பின் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் நிர்வாக அலுவலகம் மற்றும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் என்.மோகனா ஆகியோர் கலந்து கொண்டு எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி வளாகத்தில் இருந்து வேளச்சேரி சாலை வரை விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.
இதில் கல்லூரி மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனித சங்கிலி நடத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு அமைப்பு செயலாளர் கோபி, இளைஞரணி செயலாளர் அபினேஷ், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments