இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தின் தற்போதைய நிலை அரசு நிர்வாகத்தின் முக்கிய மையமாக செயல்பட வேண்டிய வட்டாட்சியர் அலுவலகம் இன்று அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயலிழந்த நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பழைய. அம்மா லேப்டாப்கள் மட்டுமே நம்பிக்கைஅதிநவீன தொழில்நுட்ப காலத்தில், அரசு ஊழியர்கள் இன்னும் பழைய “அம்மா லேப்டாப்களை” பயன்படுத்தியே பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை. உருப்படியான கணினி வசதிகள் இல்லாமல் மக்கள் சேவை எப்படி தாலுகா அலுவலகத்தில் சிறப்பாக வழங்கப்படும்.
பணியாளர்கள் அமர்ந்து வேலை செய்ய கூட சரியான இருக்கைகள் இல்லை. உடைந்து போன, பழைய இரும்புக் கடைக்கு செல்ல வேண்டிய அளவுக்கு மோசமான நாற்காலிகளில் அமர்ந்து அதிகாரிகள் பணியாற்றும் நிலை.
ஒரு குடும்பத்திற்கு ₹5000 வழங்க அரசிடம் நிதி இருக்கும்போது, ஒரு தாலுகா அலுவலகத்திற்கு அடிப்படை தளவாடங்கள் வழங்க நிதி இல்லையா? அல்லது அக்கறை இல்லையா?
கீழக்கரையில் நன்றாக இருந்த நகராட்சி அலுவலகக் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட கோடிக்கணக்கில் செலவுசெய்ய திட்டமிடும் அரசு அதே பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தின் அவலநிலையை ஏன் கவனிக்கவில்லை.
கட்டிடங்களை இடித்து கட்டுவதில் காட்டும் ஆர்வம், மக்கள் சேவைக்கான அடிப்படை வசதிகளில் ஏன் இல்லைகீழக்கரை நகர பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்த வேண்டும் மேலும் பழைய, சிதிலமடைந்த இருக்கைகள் மாற்றப்பட்டு புதிய தளவாடங்கள் வழங்கப்பட வேண்டும்.
நவீன கணினி வசதிகள் ஏற்படுத்தி, மக்கள் சேவை விரைவாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டகழக செயலாளருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தனது மேம்பாட்டு நிதியில் இருந்து கீழக்கரை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு தேவையான சேர் டேபிள் கணிணி முக்கியபொருட்களை வாங்கிதர வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 Comments