• Breaking News

    காரைக்கால்: குட்ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் பன்னாட்டு யோகா தினம் சிறப்பாக நடைபெற்றது

     


    காரைக்கால் : குட்ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் 21.06.2025 சனிக்கிழமை காலை  8 மணியளவில் பன்னாட்டு யோகா தினம் சிறப்பாக நடைபெற்றது.இவ்வேற்பாட்டினை பள்ளியின் தாளாளர்  ரான்சன் தாமஸ் முதல்வர் டாக்டர். ஜாய் தாமஸ் சிறப்பாக செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் சூர்யநமஸ்காரம் , பத்மாசனம் ,  புஜங்காசனம் ,  தனுராசனம் , விருட்சாசனம் ,  அர்த்த சக்ராசனம் முதலிய ஆசனங்கள் இடம்பெற்றிருந்தன.இதில் பள்ளி மாணவ மாணவிகளும்,ஆசிரியர்களும்   பங்கேற்று பயனடைந்ததோடு மட்டுமின்றி  யோகாவின் முக்கியத்துவத்தையும்  வெளிப்படுத்தினர்.

    மேலும் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக   சுமார்  700 மாணவ மாணவிகள்  மனித சங்கிலி அமைத்து யோகாவின் சின்னத்தை வடிவமைத்தனர் .



    No comments