திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக அலுவலகம் திறப்பு...... நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணைந்தனர்.......



திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக நிர்வாக வசதிக்காக கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் மூன்றாக பிரித்து மூன்று ஒன்றிய செயலாளர்களை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவின் பேரில் அறிவித்தார் அதனை தொடர்ந்து கும்முடிபூண்டி மேற்கு ஒன்றிய செயலாளராக பல்லவாடா ஜெ. ரமேஷ் குமார் அவர்களை நியமித்தது தொடர்ந்து மாதர்பக்கத்தில் இன்று கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழக அலுவலகம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



தொடர்ந்து கழக வளர்ச்சிக்கு பாடுபடுவோம் எனவும் 2026 எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை முதலமைச்சர் ஆக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து கழகக் கொடியேற்றி 2000 பேருக்கு பிரியாணி உணவு வழங்கினார் தொடர்ந்து எண்ணம் கண்டிகையில் 680 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் எழுதுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது தொடர்ந்து திமுக விசிக நாம்தமிழர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் கழகத்தில் இணைந்தனர் அப்போது அவர்களுக்கு சால்வை அணிவித்து கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் வரவேற்றார் தொடர்ந்து கழகப் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படுவோம் என அப்போது அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .



 இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் , எஸ் எம் ஸ்ரீதர் டி.சி மகேந்திரன்,வேதகிரி, கோதண்டம், பூண்டி பிரசாத், முத்துக்குமார், தர்ம பிரகாஷ், சுந்தரவதனம் மாவட்ட மாணவரணி செயலாளர் டேவிட் சுதாகர், பூண்டி ஒன்றிய துணை செயலாளர் சுதாகர், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், வெங்கட் சுப்பிரமணி பார்வேந்தன் மு க சேகர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் எம் எஸ் எஸ் சரவணன் மாவட்ட ஐடி விங் செயலாளர் இமய மனோஜ் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சேதுபதி ஈக்குவார்பாளையம் முன்னாள் மா கவுன்சிலர் ஸ்ரீதர், லாரன்ஸ் மேலூர் பாஸ்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments