கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தராததால்,தங்கள் பகுதிக்கு அமைச்சர் வருகைக்கு எதிராக தீர்மானம்

 


அமைச்சர் பெரிய கருப்பனின் தொகுதியான திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பள்ளத்தூர் பேரூராட்சி. பள்ளத்தூர் நாட்டார்களிடம் அமைச்சர் பெரிய கருப்பன் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி தந்ததாகவும், கொடுக்கப்பட்ட வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததால் வார்டு எண் 14 உட்பட்ட பிள்ளையார் கூடம் பகுதிக்கு அமைச்சர் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஐந்து நபர்கள் பிள்ளையார் கூட பகுதிக்கு வருவதற்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டதாகவும், இப்பகுதியில் 950 வாக்குகள் இருந்து வருவதாகவும், இதில் 700 வாக்குகள் திமுகவின் பாரம்பரிய வாக்குகள் என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் இந்த முறை திமுகவிற்கு வாக்கு செலுத்தப் போவதில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments