கரை வேட்டி கட்டிய நபர்கள் அரசு சொத்தை ஆட்டையை போட்ட அவலம்..... உண்மையை தோலுரித்துக் காட்டிய மக்கள் நேரம் செய்தியாளருக்கு அச்சுறுத்தல்......

  


கட்சிகளின் கரை வேட்டிகளோடு வலம்  வரும் அதிகாரம் திமிர் கொண்ட அரசியல்வாதிகள் அரசு சொத்துக்களை ஆட்டையை போடுவதில் எவரும் சலித்தவர்கள் இல்லை . இது குறித்து உண்மை தன்மையோடு, ஆதாரப்பூர்வமாக மக்கள் நேரம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆட்டைய போட்ட கரை வேட்டி கட்டிய அரசியல்வாதிகள், அச்சுறுத்துவதும், காவல் நிலையங்களில் பொய் புகார் கொடுப்பதும் இதுவே வாடிக்கையாக கொண்டு வந்தனர்.

இன்னும் சற்று ஒரு படிக்கும் மேல் போய், எப்படி பத்திரிகையாளரை அச்சுறுத்துவது என கண்டறிந்து, தன்னை மிகப் பெரிய பத்திரிகை என்றும், பத்திரிக்கையில் விலை போகக்கூடிய சில செய்தியாளர்களை சந்தித்தும், அவர்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, உண்மையை எழுதும் செய்தியாளர்களை மிரட்டும் வேலையில் இறங்கியுள்ளனர்.

இதற்கு முன்னணி பத்திரிக்கை என்று வலம் வரும் செய்தியாளர்களும் அவர்கள் கொடுக்கும் விலையினை பெற்று, சக பத்திரிகையாளர்களை மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர், இதனால் ஊடகத்தின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் இழந்து வந்தாலும், இந்தியாவில் ஊடக உண்மைத் தன்மையை எழுதி இருந்தால், ஊழல் மட்டுமல்ல சமூக குற்றங்களும் நடைபெறாமல் இருந்திருக்கும் என கூறும் சமூக ஆர்வலர்கள், மக்கள் நேரம் பத்திரிக்கையாளரை அச்சுறுத்தும், பத்திரிகையாளர்களை தோலுரித்து மக்கள் முன்பு காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments